தர்மபுரி
பாலக்கோடு பகுதியில்1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
|பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட1 டன் ஆப்ரிக்கன்கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.
புகார்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை விவசாய நிலத்தில் குட்டைகள் அமைத்து வளர்த்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து தாசில்தார் ராஜா தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பாலக்கோடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் முனுசாமி (வயது 39) என்பவரின் விவசாய நிலத்தில் 3 மீன் பண்ணை குட்டைகளில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்ததுதெரியவந்தது.
1 டன் அழிப்பு
இதில் ஒரு குட்டையில் மீன் குஞ்சுகளும், மற்றொரு குட்டையில் சிறிய மீன்களும், 3-வது குட்டையில் விற்பனைக்கு தயாரான நிலையிலும் மீன்கள் என 1 டன் கெளுத்தி மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து குட்டைகளில் குழி தோண்டி புதைத்து, பிளிச்சிங் பவுடர் கொட்டி மீன்களை அழித்தனர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் குமரன், மீன்வள சார் ஆய்வாளர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் சிங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். மீன் பண்ணை குட்டைகளில் 1 டன் ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.