< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில்   மருத்துவ முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மருத்துவ முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மருத்துவ முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் அடிப்படை வாழ்க்கை திறன் என்ற தலைப்பில் மருத்துவ முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கினார். நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ஹிந்துஜா கலந்து கொண்டு விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி வழங்குவது குறித்து விளக்கி பேசினார். மேலும் பாம்பு கடித்தாலோ, விபத்தில் சிக்கி காயம் அடைபவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டாலோ உடனடியாக எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் அளிப்பது என்பது குறித்து மாணவிகளுக்கு டாக்டர் விளக்கம் அளித்தார். இதில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, சுகந்தி, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்