< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
தஞ்சை அணிக்கு முதல் பரிசு
|1 Aug 2022 11:28 PM IST
தஞ்சை அணிக்கு முதல் பரிசு
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் பகுதியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் தஞ்சை காலாகோ அணி முதல் பரிசையும், தஞ்சை ஜோசப் அகடாமி அணி 2-ம் பரிசையும், பொதக்குடி நியூ யுனைடெட் அணி 3-ம் பரிசையும், கடலூர் தூயவளலாறு அணி 4-ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன் பரிசு கோப்பைகளை வழங்கினார். இதில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன் மற்றும் கால்பந்து கழக தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.