< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிவகாசி அணிக்கு முதல் பரிசு
|1 Aug 2023 1:09 AM IST
சிவகாசி அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
சிவகாசி,
விருதுநகரில் மாநில அளவிலான விண்டோஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் கருணாகரன் நினைவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதி போட்டியில் சிவகாசி வாரியார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், கோவை ராஜலட்சுமி அணியும் மோதியது.
இதில் சிவகாசி அணி 74 புள்ளிகளும், கோவை அணி 64 புள்ளிகளும் பெற்றது. முதல் பரிசு ரூ.9 ஆயிரம் மற்றும் கோப்பை சிவகாசி அணிக்கு வழங்கப்பட்டது. 2-வது பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பை கோவை அணிக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற சிவகாசி அணியை கூடைப்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.