< Back
மாநில செய்திகள்
கபடி போட்டியில் பாசிபட்டினம் அணிக்கு முதல் பரிசு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கபடி போட்டியில் பாசிபட்டினம் அணிக்கு முதல் பரிசு

தினத்தந்தி
|
18 Aug 2023 12:15 AM IST

திருவாடானையில் நடந்த கபடி போட்டியில் பாசிபட்டினம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

தொண்டி,

திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்க சுவாமி கோவில் திருவிழாவையொட்டி 11-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை திருவாடானை ஒன்றிய கவுன்சிலர் சாந்திசெங்கை ராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டிஜிட்டல் பிரபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் முதல் பரிசை பாசிபட்டினம் பாசிஅம்மன் அணியும், 2-வது பரிசை சிலுகவயல் அணியும், மூன்றாம் பரிசை ஆதியூர் அய்யனார் அணியும் 4-ம் பரிசை கானாட்டாங்குடி அணியும் பெற்றன. பரிசுகளை முதல் நிலை ஒப்பந்தக்காரர் மாவூர் இளங்கோ, யூனியன் தலைவர், துணைத்தலைவர் இளையான்குடி செல்வி பாண்டி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன், திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியாராமு ஆகியோர் வழங்கினர்.

Related Tags :
மேலும் செய்திகள்