< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
முதற்கட்டமாக 23 தொகுதிகள் - தமிழக மின்வாரியம் அறிவிப்பு

10 Oct 2022 11:55 PM IST
நடைபாதையில் இருக்கும் மின்மாற்றிகளில் அதிநவீன ஆர்.எம்.யூ. கருவிகளை பொருத்தும் பணியை மின்வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது.
சென்னை,
நடைபாதையில் இருக்கும் மின்மாற்றிகளால் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை தவிர்க்க, "ரிங் மெயின் யூனிட்" என்ற கருவிகள் பொருத்தப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், முதற்கட்டமாக 23 தொகுதிகளில் 785 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரத்து 424 ஆர்.எம்.யூ கருவிகளை நிறுவ மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் புறநகர் சட்டமன்ற தொகுதிகளான மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருவொற்றியூர் உட்பட 23 தொகுதிகளில் 2 ஆயிரத்து 392 ஆர்.எம்.யூ கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதனால், நடைபாதை இடவசதி பெருகுவதோடு, மின்மாற்றிகளின் பராமரிப்பு செலவு குறையும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். விரைவில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.