< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்: தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
|25 Nov 2023 5:22 AM IST
2023-24-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி நடத்த இருக்கிறது.
சென்னை,
2023-24-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி நடத்த இருக்கிறது. இந்தத்தேர்வை எழுதுவதற்கு 4 ஆயிரத்து 4 தேர்வர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
அவ்வாறு விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) https://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு ஹால்டிக்கெட் முன்னதாகவே வெளியிடப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.