< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக முதல் அமைச்சர் ஆலோசனை
|3 Jan 2023 12:29 PM IST
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். போதைப் பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இலங்கையில் இருந்து தப்பித்து வந்த போதைப் பொருள் கும்பல் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.