< Back
மாநில செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து!
மாநில செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தினத்தந்தி
|
8 Oct 2023 12:13 PM IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கணைகளுக்கு வாழ்த்துகள். 107 பதக்கங்கள் என்ற சாதனை மூலம் வீரர்கள், அவர்களின் திறன், மன உறுதி, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டுகளின் திறமைகள் பிரகாசித்துள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு பாராட்டுகள். உங்களின் அசாத்திய பங்களிப்பின் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை சர்வதேச அளவில் ஒளிரச்செய்துள்ளீர்கள்." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்