< Back
மாநில செய்திகள்
ஊஞ்சலை ஆட்டிவிட்டு சிறுவர்களை மகிழ்வித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
மாநில செய்திகள்

ஊஞ்சலை ஆட்டிவிட்டு சிறுவர்களை மகிழ்வித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

தினத்தந்தி
|
8 Jun 2022 11:19 AM IST

சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

சிவகங்கை,

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் சென்றுள்ளார் .

அதன்படி சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியில் அமைக்கப்ட்டுள்ள சமத்துவபுரத்தை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பூங்கா என 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தை அவர் இன்று திறந்து வைத்தார்.

அதன் பின்னர் சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேரில சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள சிறுமிகளுக்கு சாக்லெட் வழங்கினார்.

விளையாட்டு திடலில் சிறுவர்கள் ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்தனர். அப்போது ஊஞ்சல் அருகில் சென்ற முதல்-அமைச்சர் அதனை ஆட்டிவிட்டு சிறுவர்களுடன் சேர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வு அங்குள்ள எல்லோரையும் கவர்ந்தது.

மேலும் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்