திரு.வி.க.நகர் பகுதியில் கால்பந்து மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
|திரு.வி.க.நகரில் 2.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திரு.வி.க.நகரில் 2.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பல்லவன் சாலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 2.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, சென்னை துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.