< Back
மாநில செய்திகள்
பெரியார் சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
17 Sept 2022 9:44 AM IST

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது

சென்னை

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது

அதன்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்