< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் புதிய கால்பந்து மைதானத்தை திறந்துவைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|20 Oct 2023 5:59 PM IST
கொளத்தூர் பல்லவன் சாலையில் புதிய கால்பந்து மைதானத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை,
சென்னை, கொளத்தூர் பல்லவன் சாலையில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்பந்து விளையாட்டு மைதானத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனை தொடர்ந்து சென்னை திரு.வி.க.நகரில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.