அரியலூர்
திட்டக்குழு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம்
|திட்டக்குழு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டம் மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான சந்திரசேகர் தலைமையிலும், மாவட்ட திட்டக்குழு துணைத் தலைவரும், மாவட்ட கலெக்டருமான ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையிலும் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் முருகண்ணன் மாவட்ட திட்டக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடு குறித்து உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் எடுத்து கூறினார். இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், நிரந்தர சிறப்பு அழைப்பாளர்களான ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட திட்டப்பிரிவு புள்ளியியல் அலுவலர் முகிலன் நன்றி கூறினார்.