< Back
மாநில செய்திகள்
கார்த்திகை முதல் நாள்: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
மாநில செய்திகள்

கார்த்திகை முதல் நாள்: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

தினத்தந்தி
|
17 Nov 2022 4:01 PM GMT

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.

சென்னை,

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். இதன்படி ஒரு மண்டலம்(48 நாட்கள்) முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு சிறப்புபூஜைகள் நடத்துவார்கள்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று மாலை அணிந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

மேலும் செய்திகள்