< Back
மாநில செய்திகள்
வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு..!
மாநில செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு..!

தினத்தந்தி
|
7 Dec 2022 4:22 PM IST

ஈரோட்டில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்ம கும்பல் ஒன்று வனவிலங்குளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதிக்குள் நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிக் கொண்டிருந்த ஒரு கும்பல் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

இதனால் அவர்களை வனத்துறையினர் விரட்டி சென்றனர். அந்த கும்பல் தப்பிப்பதற்காக வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சூட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி வனத்துறையினரும் பதிலுக்கு அந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்க முயன்றனர்.

இதில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மற்ற 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்