< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11-ம் தேதி முதல் பட்டாசு விற்பனை - சுற்றுலாத்துறை அறிவிப்பு
|10 Sept 2022 10:30 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, தீவுத்திடலில் அக்டோபர் 11-ம் தேதி முதல் பட்டாசு விற்பனை செய்ய சுற்றுலாத்துறை அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை செய்ய சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.
3 மீட்டர் இடைவெளியில் 55 பட்டாசு கடைகளை வைக்க சுற்றுலாத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.