< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே துணி துவைக்கும் எந்திரத்தில் புகுந்த பாம்பு - தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் அருகே துணி துவைக்கும் எந்திரத்தில் புகுந்த பாம்பு - தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

தினத்தந்தி
|
16 April 2023 3:08 PM IST

மறைமலைநகர் அருகே துணி துவைக்கும் எந்திரத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்கரணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள துணி துவைக்கும் எந்திரத்தில் துணிகளை போட்டு இயக்கினார். அப்போது எந்திரத்தில் இருந்து உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜலட்சுமி துணி துவைக்கும் எந்திரத்தை நிறுத்தினார். மீண்டும் அதே போல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. எந்திரத்தில் பாம்பு இருப்பதை பார்த்த ராஜலட்சுமி உடனே மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எந்திரத்தில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி உயரமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்