< Back
மாநில செய்திகள்
தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:45 AM IST

தகவல்பெறும் உரிமை சட்டம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம்-2005 குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து புறப்பட்ட நடைபயணத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் நடைபயணத்திலும் கலந்து கொண்டார். நடைபயணத்தில் கலந்து கொண்ட தீயணைப்பு வீரர்கள் தகவல்பெறும் உரிமை சட்டம் குறித்து பல்வேறு வாசங்கள் இடம் பெற்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். நடைபயணம் பெரம்பலூர் நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையத்துக்கு வந்து நிறைவடைந்தது. இதில் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர்கள் வீரபாகு, கோமதி, தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்