< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்திகை பயிற்சி
|6 Aug 2023 4:00 PM IST
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்பது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து பொதுமக்களை எப்படி பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் மீட்பது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி நந்திவரம் திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.