நாமக்கல்
காணாம்பாளையத்தில்உயர் மின் அழுத்தத்தால் எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதம்
|வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சி காணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 65). இவருடைய வீட்டில் உள்ள டி.வி., குளிர்சாதன பெட்டி ஆகியவை நேற்று திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதே பகுதியில் உள்ள மாரப்பன் (48) என்பவரின் ஸ்டெபிலைசர் வெடித்தது. மேலும் ராமசாமி மகன் பழனிவேல் வீட்டில் உள்ள டி.வி. வெடித்தது.
அதேபோல் சசிகுமாரின் வீட்டில் மின்விசிறி, சிவகாமி வீட்டில் ஸ்டெபிலைசர், ராமசாமி வீட்டில் மின் அடுப்பு ஆகியவை சேதம் அடைந்தது. இதுகுறித்து வெண்ணந்தூர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஓயர் மேன் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு உயர் மின் அழுத்தத்தின் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.