< Back
மாநில செய்திகள்
லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

தினத்தந்தி
|
22 Oct 2023 1:17 AM IST

சிவகாசி பகுதிகளில் லாரி செட்டில் பதுக்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 410 பட்டாசு பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக கருகி பலியானார்கள். இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் 2-வது நாள் நடந்த ஆய்வில் உரிய அனுமதியின்றி அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் லாரி செட் அமைத்து அதில் 410 பட்டாசு பண்டல்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த லாரி செட்டில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 410 பட்டாசு பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல் அடுத்து வரும் நாட்களிலும் சோதனைகள் தொடரும் என சிவகாசி தாசில்தார் வடிவேல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்