< Back
மாநில செய்திகள்
பட்டாசு கடை வைக்க அனுமதிக்கக்கூடாது
விழுப்புரம்
மாநில செய்திகள்

பட்டாசு கடை வைக்க அனுமதிக்கக்கூடாது

தினத்தந்தி
|
15 Oct 2022 12:15 AM IST

திண்டிவனம் வ.உ.சி. திடலில் பட்டாசு கடை வைக்க அனுமதிக்கக்கூடாது இந்து முன்னணி கோரிக்கை

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி திண்டிவனம் வ.உ.சி. திடல் உள்பட நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்துக்கொள்ள நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது. குறிப்பாக வ.உ.சி. திடல் அமைந்துள்ள பகுதியில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் இருப்பதாலும், டவுன் பஸ்கள் வந்து திரும்பும் இடமாக இருப்பதாலும், மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடத்தில் பட்டாசு கடை வைக்க அனுமதிக்க கூடாது. அதற்கு பதிலாக வேறு இடத்தில் பட்டாசு கடை வைக்க அனுமதிக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்