< Back
மாநில செய்திகள்
பட்டாசு பதுக்கியவர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

பட்டாசு பதுக்கியவர் கைது

தினத்தந்தி
|
29 Sept 2023 3:18 AM IST

பட்டாசு பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,

சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் சின்னகாமன்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளர் சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த சதீஷ்ராஜான் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்