< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இருவர் உயிரிழப்பு
|14 Aug 2024 11:35 AM IST
பட்டாசு ஆலையில் லாரியில் இருந்து மூலப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாயதேவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று லாரியில் இருந்து மூலப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புலி குட்டி, கார்த்திக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்ட பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.