< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை - தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்
சென்னை
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை - தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்

தினத்தந்தி
|
18 Aug 2022 10:15 AM IST

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது குறித்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு தீயணைப்பு படையினர் சார்பாக விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து வடசென்னை தீயணைப்பு துறை உதவி மாவட்ட அதிகாரி முருகன் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி 'டீன்' டாக்டர் தேரணிராஜன், ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் தீ விபத்து குறித்தும், தீ தடுப்பு உபகரணங்களை எவ்வாறு கையாள வேண்டும்? தீ பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன? என்பது குறித்தும் மாதிரி ஒத்திகை பயிற்சி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் முதல்கட்டமாக ஆஸ்பத்திரியில் தீ விபத்து குறித்து ஒத்திகை பயிற்சி அளித்தோம். தொடர்ந்து துறை வாரியாக பயிற்சி அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்