< Back
மாநில செய்திகள்
தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
23 Jun 2022 6:39 PM IST

மேலக்கரந்தையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பில் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தீ தடுப்பு மற்றும் தென்மேற்கு பருவமழை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் தென்மேற்கு பருவமழை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்