< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை
|13 July 2023 11:41 PM IST
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பித்து கொள்வது, தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், மழை, வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் எப்படி தற்காத்து கொள்வது என்பன போன்ற பல்வேறு தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மேலும் தீத்தடுப்பு குறித்து கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.