< Back
மாநில செய்திகள்
தீத்தடுப்பு செயல்விளக்க நிகழ்ச்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

தீத்தடுப்பு செயல்விளக்க நிகழ்ச்சி

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

வாழச்சேரியில் தீத்தடுப்பு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வாழச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், மாணவர்களுக்கு தீத்தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தால் அதனை எவ்வாறு அணைப்பது, விபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, தீயணைப்புப் பணிகளில் ஈடுபடும் போது குழாயை பிடித்து எப்படி தண்ணீர் பாய்ச்சி தீயை அணைப்பது, மாணவர்கள் தற்காப்பு முறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்டவை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்