< Back
மாநில செய்திகள்
தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

சின்னங்குடி அரசு பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே சின்னங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையினர் சார்பில் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் அருள்மொழி, முல்லைவேந்தன் ஆகியோர் கன மழை, மற்றும் புயல், தீ விபத்து போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எதிர்கொள்ளும் தீத்தடுப்பு குறித்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு விளக்கிக் கூறி செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் தீயணைப்பு வீரர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்