< Back
மாநில செய்திகள்
தீ தடுப்பு விழிப்புணர்வு
கடலூர்
மாநில செய்திகள்

தீ தடுப்பு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
23 April 2023 12:40 AM IST

விருத்தாசலத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழாவையொட்டி தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி, போக்குவரத்து நிலைய அலுவலர் மணிவேல், சம்பத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விருத்தாசலம் நகர முக்கிய சாலைகளில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் விருத்தாசலம் பேருந்து நிலையம், விருத்தகிரீஸ்வரர் கோவில், தென்கோட்டை வீதி, கடைவீதி, விருத்தாசலம் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ தடுப்பு மற்றும் மீட்பு, முதலுதவி குறித்து பல்வேறு விதமான செயல் விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்