< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பஞ்சு குடோனில் தீ விபத்து
|24 July 2022 11:06 PM IST
விழுப்புரம் அருகே பஞ்சு குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே பனங்குப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் அதே பகுதியில் ஷோபா, பெட் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக பஞ்சுகளை கொள்முதல் செய்து தனது கடைக்கு அருகில் உள்ள ஒரு குடோனில் வைத்திருந்தார். இந்த நிலையில்நேற்று மாலை திடீரென பஞ்சுகுடோன் தீப்பிடித்து எறிந்தது. இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீவிபத்தில் குடானில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.