< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
உப்புக்கோட்டையில் தீ விபத்து:1,000 வாழை மரங்கள் எரிந்து நாசம்
|19 Aug 2023 12:15 AM IST
உப்புக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,000 வாழை மரங்கள் எரிந்து நாசமாகின.
உப்புக்கோட்டையில் தனியார் பள்ளி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் காய்ந்து கிடந்த வாழை சருகளில் தீப்பற்றியதில் கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட தோட்டத்து பணியாளர் முத்தையா போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.