< Back
மாநில செய்திகள்
திருமுல்லைவாயல் அருகே ராணுவ வீரர் வீட்டில் தீ விபத்து - வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே ராணுவ வீரர் வீட்டில் தீ விபத்து - வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்

தினத்தந்தி
|
11 April 2023 2:01 PM IST

திருமுல்லைவாயல் அருகே ராணுவ வீரர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதமடைந்தது.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 41). ராணுவ வீரரான இவர், தற்போது உத்தரபிரதேச மாநிலம் உத்ராஞ்சல் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்கு பணியாற்றி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமுல்லைவாயலில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கிய அவர், பின்னர் வீட்டை பூட்டிவிட்டு உத்தரபிரதேசம் சென்றார்.

நேற்று காலை இவரது வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை சுமார் ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், கட்டில், பீரோ, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்து குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்