< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரூர் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
|4 Sept 2022 2:40 PM IST
அரூர் அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
அருர் ,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தாமரைகோழியம்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மின் கசிவி ஏற்பட்டு கோழி பண்ணையில் தீ பற்றியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் விஸ்வநாதன் அரூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கோழி பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் 2 ஆயிரம் கோழி குஞ்சுகள், 10 மூட்டை கோழி தீவனம் உள்பட பல்வேறு உபகரண பொருட்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.