< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மர குடோனில் தீவிபத்து
|4 March 2023 12:53 AM IST
அருப்புக்கோட்ைட அருகே மர குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே காந்தி மைதானம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய மரப்பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளே இந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்தது. குடோன் முழுவதும் மரப்பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குடோனில் பற்றிய தீயால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்து காணப்பட்டது.
அதேபோல திருச்சுழி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மாடியில் உள்ள அறையில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.