< Back
மாநில செய்திகள்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து
மாநில செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து

தினத்தந்தி
|
6 Jan 2024 4:04 PM IST

செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

சென்னை எழும்பூரிலிருந்து இன்று மதியம் 1.50 மணியளவில் மதுரை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பியது. தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு நோக்கி ரெயில் சென்று கொண்டிருந்தபோது, டி1 பெட்டியில் பயணி ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது, மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை எழுந்தது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டு தீயணைப்பான் மூலம் கரும்புகை அணைக்கப்பட்டது. பின்னர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்