< Back
மாநில செய்திகள்
மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மரில் தீ
விருதுநகர்
மாநில செய்திகள்

மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மரில் தீ

தினத்தந்தி
|
17 Oct 2023 12:56 AM IST

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மரில் தீவிபத்து ஏற்பட்டது.

சிவகாசி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் சித்துராஜபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிரகத்தாயம்மாள் நகரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்னல் தாக்கியது.

உடனே டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மின்வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியில் உள்ள 1,200 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரம் போராடி தீயில் எரிந்து நாசமான வயர்களை உடனடியாக மாற்றி சீரமைத்தனர். இதையடுத்து மீண்டும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. துரித நடவடிக்கை எடுத்த மின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்