< Back
மாநில செய்திகள்
கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து

தினத்தந்தி
|
12 Oct 2023 1:34 AM IST

பேராவூரணி அருகே கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.

பேராவூரணி;

பேராவூரணி அருகே கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.

கயிறு தொழிற்சாலை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் மாலை பணி முடிந்த பின் ஊழியா்கள் சென்று விட்டனர். நேற்று அதிகாலை கயிறு தொழிற்சாலையில் திடீரென தளவாட பொருட்களில் தீப்பற்றியது. இதனால் தளவாட பொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் அங்கு வைத்திருந்த கயிறு, பஞ்சுகட்டுகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் எரிந்து நாசமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து பேராவூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் கயிறு தொழிற்சாலை எரிந்து நாசமடைந்த சம்பவம் பேராவூரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்