திருவள்ளூர்
மின் கசிவால் தீ விபத்து; 2 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்
|மின் கசிவுவால் கரும்பு தோட்டத்தில் தீ பிடித்து 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசமடைந்தது.
கரும்பு தோட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 80) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் 5 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளார். இதில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கரும்புகளை கூலியாட்கள் மூலம் வெட்டி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டு அனுப்பி வைத்ததார். மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தல் பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருந்தது.
தீ விபத்து
இந்த நிலையில் நேற்று காலை மின் கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ பற்றியவுடன் காற்றின் வேகத்தால் கரும்பு தோட்டம் முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து சுப்பிரமணி திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் அரசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமார் 1 மணி நேரம் போரடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து நாசமானது.