< Back
மாநில செய்திகள்
வாணியாறு அணையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை
தர்மபுரி
மாநில செய்திகள்

வாணியாறு அணையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை

தினத்தந்தி
|
4 Sept 2023 12:30 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) மகாலிங்க மூர்த்தி உத்தரவுபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கை, அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீயணைப்பு மீட்புக்குழுவினர் நேற்று வாணியாறு அணையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். பாப்பிரெட்டிப்பட்டி ராஜேஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து அணைப்பகுதியில் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பவர்களை ரப்பர் படகில் சென்று மீட்பது போன்றும், அவர்களை கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்றும், தண்ணீரில் மூழ்கியவர்களை படகை பயன்படுத்தியும், டியூப் அணிந்து சென்று தேடுவது போன்றும் தீயணைப்பு துறையினர் தத்ரூபமாக செய்து காட்டினார்கள். இதற்காக கரைப்பகுதியில் கூரை அமைக்கப்பட்டதுடன் மீட்பு உபகரணங்களும் அணைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்