< Back
மாநில செய்திகள்
அனகாபுத்தூரில் மளிகை கடையில் தீ விபத்து
சென்னை
மாநில செய்திகள்

அனகாபுத்தூரில் மளிகை கடையில் தீ விபத்து

தினத்தந்தி
|
15 Sept 2023 9:37 AM IST

அனகாபுத்தூரில் மளிகை கடையில் தீப்பிடித்து எரிந்தது.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் ராஜேஷ்குமார்(வயது 48). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று கடையை பூட்டி வைத்திருந்தார். மதியம் 1 மணியளவில் திடீரென மளிகை கடையில் தீப்பிடித்து எரிந்தது. கடையில் இருந்து கரும்புகை மூட்டம் வெளியேறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மளிகை கடையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்