< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
டீக்கடையில் தீ விபத்து
|7 July 2023 12:15 AM IST
கூத்தாநல்லூர் அருகே உள்ள திருவிடைவாசல் பகுதியில் உள்ள டீக்கடையில் தீ விபத்து எற்பட்டது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள திருவிடைவாசல் தெருவைச்சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 60). இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கூரை கொட்டகையில் அமைக்கப்பட்ட இவரது டீக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்து புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த தீவிபத்தில் அருகில் இருந்த 3 தென்னை மரங்களும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.