< Back
மாநில செய்திகள்
சிவகங்கை பேருந்து நிலைய கடையில் தீவிபத்து - தீயணைப்புத்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு
மாநில செய்திகள்

சிவகங்கை பேருந்து நிலைய கடையில் தீவிபத்து - தீயணைப்புத்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு

தினத்தந்தி
|
4 Dec 2022 6:25 PM IST

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, அருகில் இருக்கும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய பேருந்து நிலையத்தில், நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இன்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால், பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் அங்குள்ள பெட்டிக் கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு அருகில் இருந்தவர்கள் முயற்சி செய்த நிலையில், உடனடியாக அப்பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, அருகில் இருக்கும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்