சென்னை
தாம்பரம் சானடோரியத்தில் தனியார் நிறுவனத்தில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்
|தாம்பரம் சானடோரியத்தில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாக முதல் தளத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள், தீப்பிடித்து எரிவதை கண்டு அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம், மேடவாக்கம், கிண்டி, அசோக் நகர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நவீன வசதிகள் கொண்ட 'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகனம் உள்பட 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் இருந்து 3 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிரமம் மற்றும் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். அதற்குள் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களும், மேஜை, நாற்காலி உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் தீக்கிரையாகின.
முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.