< Back
மாநில செய்திகள்
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து - 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து - 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
12 Feb 2023 1:12 PM IST

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வாணியம்பாடி,


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் அப்பகுதி மக்கள் பட்டாசு வாங்கி செல்வார்கள்.


இந்த நிலையில், பட்டாசு கடையில் இன்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


இந்த தீ விபத்தில் சேதமதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்