மதுரை
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தீ விபத்து; பந்தல் நாசம்
|கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தீ விபத்து; பந்தல் நாசம்
மதுரை
மதுரையில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது பந்தலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடித்தனர்
மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது.
இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மளமளவென எரிய தொடங்கியதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீ மேலும் பரவி விடாமல் தடுக்கும் வகையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பந்தலில் தீப்பிடித்தது
தீயணைப்பு நிலையமும் அதன் அருகிலேயே இருந்ததால் உடனடியாக தீயானது அணைக்கப்பட்டது.
இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பந்தலுடன் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து சம்பந்தமாக திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.