< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே பழைய இரும்பு பொருட்கள் கடையில் தீ விபத்து - 4 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பால் பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே பழைய இரும்பு பொருட்கள் கடையில் தீ விபத்து - 4 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பால் பாதிப்பு

தினத்தந்தி
|
7 March 2023 3:11 PM IST

திருவள்ளூர் அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் ெபாருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 50). இவர் ஈக்காடு பகுதியில் கிருஷ்ணா கால்வாய் அருகே கடந்த 2019-ம் ஆண்டு முதல் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் காயலான் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் வடமாநில வாலிபர் உமேஷ் (20) என்பவர் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீயானது மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக உமேஷ், ஜனார்த்தனனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர், திருவூர் தீயணைப்பு படை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்த தீயை சுமார் 3 மணி நேரம் போராடி அனைத்தனர். இந்த தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாகிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பூண்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு சுமார் 4 மணி நேரம் மின் இணைப்பு பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்