< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டையில் பட்டாசு கடையில் தீ விபத்து; மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் பட்டாசு கடையில் தீ விபத்து; மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 10:20 PM IST

புதுக்கோட்டையில் மணமேல்குடி பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள கடை வீதியில் பட்டாசு கடை நடத்தி வரும் காளிமுத்து என்பவர், வழக்கம்போல் அதிகாலை கடைக்குச் சென்று இன்வெர்ட்டருக்கு சார்ஜ் போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்த சூழலில் அவரது கடையில் இருந்து கரும்புகை வெளிவருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காலை நேரம் என்பதால் கடை வீதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததோடு, மற்ற கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்