< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் விவசாயி வீட்டில் திடீர் தீ; பணம், பொருட்கள் எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் விவசாயி வீட்டில் திடீர் தீ; பணம், பொருட்கள் எரிந்து சேதம்

தினத்தந்தி
|
2 Jun 2023 12:30 AM IST

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி ஊராட்சி மட்டா மத்திகிரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி சரோஜம்மா. இவர்கள் தங்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கணவன், மனைவி வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது திடீரென வீட்டுக்குள் தீப்பிடித்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் எரிய தொடங்கின. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், 10 மூட்டை ராகி, 2 மூட்டை அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், கட்டில் மெத்தை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் பத்திரங்கள் எரிந்து சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்